Yogi adityanath | உ.பி பாஜகவில் விரிசல்..குழப்பத்தில் திணறும் அமித்ஷா.. யோகி தலை தப்புமா?
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனான கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து இருப்பது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற தவறியது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்த்து இருந்த உத்தரபிரதேச மாநில மக்கள் பாஜகவுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 தொகுதிளே கிடைத்தன. தோல்விக்கான காரணம் குறித்து மாநில பாஜக தலைவர்கள் லக்னோவில் சந்தித்து விவாதித்தனர்.அப்போது முதலமைச்சர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் தான் தோல்விக்கு காரணம் என செயற்குழு நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார். அரசாங்கத்தை விட கட்சியே பெரியது என்றும் கட்சியை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்றும் விமர்சித்த அவர் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்காமல் உயர் பதவியில் உள்ளவர்கள் தனித்து செயலாற்றுவதே தோல்விக்கு காரணம் என ஆதித்யநாத் மீது குற்றம் சாட்டி இருந்தார். முதலில் தான் ஒரு பாஜக தொண்டன் பின்னர் தான் துணை முதல்வர் என்று கேசவ் பிரசாத் மௌரியா பேச்சு முதல்வர் ஆதித்யநாத் உடனான விரிசல்களை தெளிவாக காட்டும் விதமாக இருந்தது.
முன்னதாக உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத்தும் பின்னடைவுக்கு ஏழைகளின் வீடுகளை இணைக்கும் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் புல்டோசர் கலாசாரமே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு டெல்லி சென்ற உத்தரபிரதேச துணை முதலமைச்சர் கேசவம் அவுரியா ஒன்றிய அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பு பற்றிய விவரங்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற வியூகங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது