Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்
முடா முறைகேடு சர்ச்சையை தொடர்ந்து சித்தராமைய்யா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். காங்கிரஸ் தொண்டர் ஒருவரை அழைத்த சித்தராமையா காலில் உள்ள ஷூ வை கழட்ட சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த தொண்டர் கையில் தேசிய கொடியுடன் சித்தராமைய்யா ஷூவை கழட்டியதில் ஷுவில் தேசிய கொடி பட்டத்தால் பூகம்பம் கிளம்பியுள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் வலியுறுத்தி வலியுறுத்தியது.
இத்தகை சூழலில், சித்தராமையாவின் மனைவி MUDA-க்கு, `எனது கணவரின் மானம், கண்ணியம், மன அமைதியை விட வீடு, நிலம், செல்வம் எதுவுமே முக்கியம் இல்லை' என்று குறிப்பிட்டு, இழப்பீடாக ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பியளிப்பதாக கடிதம் எழுதினார். இவரின் கடிதத்தைத் தொடர்ந்து, தனக்கெதிராக வெறுப்பு அரசியலால் தன்னுடைய மனைவி பாதிக்கப்பட்டதாகவும், அவரின் முடிவை மதிப்பதிகாவும் சித்தராமையா தெரிவித்தார். இந்த நிலையில், குடும்பப் பெண்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்க வேண்டாம் எதிர்க்கட்சிகளை சித்தராமையா வலியுறுத்தியிருக்கிறார்.
இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் சித்தராமையா பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது கையில் தேசியக் கொடியுடன் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் காலணிகளை ஷூ லேஸைக் கழட்டுவது கேமராவில் சிக்கியது. அதில் காங்கிரஸ் தொண்டர் கையில் தேசியக் கொடி வைத்துகொண்டே ஷூவை கழட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஷுவில் தேசிய கொடி பட்டத்தை அடுத்து அருகிலிருந்தவர்கள் அவரிடமிருந்து கொடியை பிடுங்கினர். காங்கிரஸ் தொண்டரை அழைத்து சித்தராமையா ஷூவை கழட்ட சொன்னதால் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது.கையில் தேசிய கொடியுடன் ஷு வை கழட்டிய காங். தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.