Congress Vs DMK | திமுகவை சாடிய காங்கிரஸார்..அதிரடி காட்டும் டெல்லி தலைமை’’இப்பவே பதில் சொல்லுங்க’’

Continues below advertisement

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான திமுக குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் மேலிடம் வரை சென்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியின் பலமாக கருதப்படும் கட்சியில் ஒன்று திமுக. இந்த மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக 40/40 என்ற மெகா வெற்றியை பெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் திமுகவுக்கு எதிராக பொதுவெளியில் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்து வருவது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

முன்னதாக செல்வப்பெருந்தகை, 2026 தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸின் நிலை அப்படியில்லை. 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன் கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆளும்கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் ரெண்டும்கெட்டானாக உள்ளது என பேசிய அவர் திமுக ஆட்சி குறித்தும் விமர்சித்து பேசியிருந்தார்.  இவர்களது இந்த பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்தது டெல்லி தலைமை வரை சென்றுவிட்டதாம். 
 
 இதையடுத்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் மூலம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் தலைமை இன்று உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram