CM Vijay Report | ரிப்போர்ட் எங்ககிட்ட கொடுங்க பவர்சென்டர் பஞ்சாயத்து CMக்கு குறுக்கே வரும் மூவரணி

Continues below advertisement

அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த உளவுத்துறை அறிக்கை முதலமைச்சர் விஜய் பார்வைக்கு செல்லும் முன்பே சீனியர் அமைச்சர் உட்பட 3 பேர் பார்வையிடுவதாக வெளிவந்துள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் தவெக, இந்த ஒரு மாத ஆட்சியில் முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகள் மாற்றம், சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம், உளவுத்துறை ஐஜி நியமனம், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் என நிர்வாக ரீதியாக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

அந்த வரிசையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி,  அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளைக் கண்காணிக்க, காவல்துறை உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் இதன் கண்காணிப்பு அறிக்கை, உளவுத்துறை ஐ.ஜி வாயிலாக முதலமைச்சருக்கு வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு இரண்டு முறை அனுப்பி வைக்கப்படும்.

இதன்மூலம் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் செயல்பாடுகளை முதல்வர் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் அனுப்பிவைக்கப்படும் கண்காணிப்பு அறிக்கைகள் அவரிடம் செல்வதற்கு முன்பாகவே, தவெக தேர்தல் வியூக வகுப்பாளார் ஜான் ஆரோக்கியசாமி அதனை பார்வையிடுவதால், உளவுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜான் ஆரோக்கியசாமி மட்டுமல்லாமல், மூத்த அமைச்சர் ஒருவரும், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி ஒருவரும் அந்த அறிக்கையை கேட்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆட்சிக் காலங்களில் இப்படி நடந்திருக்கிறது என்று கூறப்பட்டாலும், இவ்வாரு நடப்பதால் அரசின் ரகசியங்கள் கசியவும் வாய்ப்பிருக்கிறது.

பதவியேற்பின்போது, இந்த ஆட்சியில் ஒரே பவர் சென்டர் தான் என விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவல் அரசியல் வாட்டரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola