CM MK Stalin Health Condition | CM ஸ்டாலின் உடல்நிலை..APOLLO வெளியிட்ட அறிக்கை! எப்போது டிஸ்சார்ஜ்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் அவருக்கு தலை சுற்றல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாகவும் அப்பல்லோ மருத்துவமனை  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ளா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அங்கிருந்தபடியே அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.  இச்சூழலில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முதலமைச்சருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்தார்கள், தற்போது அவர் நலமுடன் உள்ளார்”என்றார்.


இந்த நிலையில் முதலமைச்சரின் உடல்நலம் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்.”என்று கூறப்பட்டுள்ளது.
.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola