Duraimurugan vs Rajinikanth | "EV வேலுவால் தான் பிரச்சனை" கொட்டி தீர்த்த துரைமுருகன்! நடந்தது என்ன?

Continues below advertisement

மூத்தவர்கள் இல்லாமல் கட்சியை நடத்திவிட முடியுமா? என்னை மட்டும் ரஜினி சொல்லவில்லை, நிறைய ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க என்று ஒட்டுமொத்த கட்சியையும் பேசியுள்ளார்.. எல்லா பிரச்சனையும் இந்த எ.வ வேலுவால் தான், முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவருடைய வீட்டில் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பொறுமி தள்ளியுள்ளார். இந்நிலையில் துரைமுருகனை சமாதானம் செய்த முதல்வர், இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு இங்கிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளார்..

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக கலைஞர் நினைவிடம், அண்ணா நினைவிடம் ஆகியவற்றுக்கு சென்று வணங்கினார், அது அனைத்தையுமே அமைச்சர் துரைமுருகன் புறகணித்துவிட்டார். 

அதற்கு காரணம் அண்மையில் அமைச்சர் எ.வ வேலுவின் கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், ஓல்ட் ஸ்டுடென்ட் என்று துரைமுருகனை கிண்டலாக ரஜினி பேசியதை அவர் ரசிக்கவில்லை. அதற்கு பல்லு போன நடிகர் எல்லாம் என்று காட்டமாக விமர்சனத்தையும் முன் வைத்திருந்தார் துரைமுருகன்.

இது திமுகவுக்குள்ளும் வெளியேவும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்த, கடுப்பான முதல்வர் ஸ்டாலின் நேரடியாக துரைமுருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நம்முடைய நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை இப்படித்தான் அவமரியாதை செய்து பேசுவதா? என்று கோபமாக பேசியதாகவும், அதற்கு துரைமுருகன் அளிக்க வந்த விளக்கத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லபடுகிறது. மேலும் நீங்கள் பேசியது தவறு ரஜினியிடம் வருத்தம் தெரிவியுங்கள் என்று முதல்வர் தரப்பிலிருந்து அழுத்தம் வர, நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம் என்று இந்த சர்ச்சைகளுக்கு எண்ட் கார்டு போட்டார் துரைமுருகன். 

ஆனால் இந்த விவகாரத்தில் முதல்வர் மீது துரைமுருகனுக்கு சிலர் வருத்தங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, அதனால் தான் வழக்கமாக முதல்வருடன் வலம் வரும் துரைமுருகன் நினைவிடங்களில் மிஸ்ஸிங் என சொல்லபடுகிறது.


இதனால் விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அமைச்சர் துரைமுருகன் வருவாரா, வர மாட்டாரா என்ற பதற்றம் திமுக சீனியர்கள் மத்தியில் இருந்துள்ளது, ஒரு வேலை வராமல் போனால் அதை வைத்தே கட்சிக்குள் புகம்பத்தை கிளப்பி விடுவார்கள் என்று, இந்நிலையில் துரைமுருகன் வருத்தமாக இருப்பதை அறிந்து, அவரை தொலைப்பேசியில் அழைத்த முதல்வர், வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பே சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சரை வழியனுப்ப மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் வருகை தந்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்பு தனியாக முதல்வரை அவருடைய இல்லத்தில் சந்தித்த துரைமுருகன் தன்னுடைய வருத்தத்தை ஸ்டாலினிடம் பதிவு செய்துள்ளார், அதில் “ரஜினிகாந்த ஓல்ட் ஸ்டூடண்ட் என்று சொன்னதை விட, அதை நீங்கள் ரசித்து ஆமோதிக்கும் வகையில் நடந்துக்கொண்டதே எனக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. ரஜினி என்னுடைய நண்பர் தான், என் மீது உள்ள உரிமையில் அவர் என்ன கருத்து வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ரஜினிகாந்த் என்னை மட்டும் ஓல்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லவில்லை, பலர் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இதில் மிக பெரிய அரசியல் புதைந்து இருக்கிறது, இதை எப்படி நீங்கள் ஆதரிக்கலாம். மூத்த அனுபவசாலிகள் இல்லாமல் கட்சியை வழிநடத்தி விட முடியுமா? என்று ஆதங்கபட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் எவ வேலு மீதான தன்னுடைய வருத்தத்தையும் சொன்ன அமைச்சர் துரைமுருகன் “நான் கட்சியின் சீனியர் என்பதை தாண்டி, கட்சியின் பொதுச்செயலாளர்.. எனக்கு மேடையில் இருக்கை ஒதுக்கவில்லை” முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் தனக்கு மேடையில் இருக்கை இல்லாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற வழக்கத்தை கொண்டிருந்தார்” இனி நானும் அப்படி தான் செய்ய வேண்டும் போல.. ரஜினி வழக்கமாக மற்றவரை காயப்படுத்தி பேசுபவர் இல்லை, இது எவ வேலுவின் கருத்தாக இருக்கும் பட்சத்தில், அதை தொடக்கத்திலேயே சீரியஸாக எடுத்துக்கொண்டு தடுத்து நிறுத்துவது அவசியம் என்று கொட்டி தீர்த்துள்ளார் துரைமுருகன்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலினும் மூத்த அமைச்சரான துரைமுருகனை சமாதானம் செய்யும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அதன் பின்னரே விமான நிலையம் வரை வந்தார் அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினிடம் ரஜினி துரைமுருகன் இடையேயான விவாதம் குறித்து கேட்டபோதும், அவர்கள் நண்பர்கள் நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவிக்க, சிரித்துக்கொண்டே பொண்முறுவலுடன் அதனை கடந்தார் துரைமுருகன். 

அதே நேரம் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வரை எந்த புதிய சர்ச்சைகளையும் உருவாக்காமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யுமாறு அமைச்சர்கள் அனைவருக்கும் ஸ்டாலின் அறிவுறுத்திவிட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram