Chandrasekar Pemmasani : மோடியுடன் TOP பணக்காரர்! டாக்டர் To மத்திய அமைச்சர் யார் இந்த சந்திரசேகர்?

Continues below advertisement

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யான சந்திரசேகர் பெம்மாசானி, மக்களவையின் பணக்கார உறுப்பினராக கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பை கண்டு பிரம்மிப்படைய செய்துள்ளது.

மக்களவையின் பணக்கார உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மசானி பிரதமர் மோடி தலைமையிலான  அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். யார் இந்த  சந்திரசேகர் பெம்மசானி, இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைத்தது. பிரதமராக 3வது முறையாக மோடி  பதவியேற்ற நிலையில், அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த முறை பாஜக கட்சியினர் பெரும்பாலானோர் அமைச்சராக பதவியேற்ற நிலையில், இந்த முறை கூட்டணி ஆட்சி அமைப்பதால், கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது

இந்நிலையில்,  ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) குண்டூர் எம் பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர் பெம்மாசானியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சராகுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.  இவர்தான் மக்களவையின் பணக்கார உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 48 வயதுடைய மருத்துவரான பெம்மசானி,  2024 மக்களவைத் தேர்தல் மூலம், தெலுங்கு தேச கட்சியின் சார்பாக போட்டியிட்டார். இவர் குண்டூர் மக்களவைத் தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 3,44,695 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு கிட்டத்தட்ட ரூ. 5,785 கோடி மதிப்புள்ள குடும்பச் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவையில் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் இவர்தான் ,பணக்காரராக மாறியுள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, அவரது தனிப்பட்ட சொத்துக்கள் ரூ.. 2,448.72 கோடியாகவும், அவரது மனைவிக்கு ரூ. 2,343.78 கோடியாகவும், குழந்தைகளிடம் ரூ. 1,000 கோடியாகவும் உள்ளது. இருப்பினும், இவர்களின் குடும்பத்துக்கு, அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கிக்கு ₹ 1,138 கோடி கடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 

பெம்மசானி, டாக்டராக வேண்டும் என்ற தனது லட்சியத்தால் உந்தப்பட்ட இவர், 1999 இல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பும் மற்றும் 2005 இல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பும் முடித்துள்ளார்.பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு , மிகுந்த உறுதுணையாக இருந்ததில், ஆந்திராவின் தெலுங்கு தேச கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மக்களவையின் பணக்கார வேட்பாளரும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவரும் சந்திரசேகர் பெம்மாசானி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram