அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்
திரைமறைவில் விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்த அருண்ராஜ், தவெகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு விஜய் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தவெகவிற்குள் நுழைந்துள்ள முக்கிய புள்ளிகளால் தன்னுடைய நிலை பரிதாபமாக போய்விடுமோ என்ற பயத்தில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக சொல்கின்றனர்.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் கட்சிக்குள் வரும் போதே துணை பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் பிரிவு மேலாண்ம பொதுச்செயலாளர் பதவிகளை கையில் ஒப்படைத்தார் விஜய். அதன்பிறகு கட்சிக்குள் புது ENTRY எதுவும் இல்லாமல் சைலண்ட் மோடில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள அருண்ராஜ், தவெகவில் விரைவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே மறைமுகமாக அவருக்கு அரசியல் ஸ்ட்ராடஜிகளை சொல்லிக்கொடுத்து பக்கபலமாக இருந்தது அருண்ராஜ் தான் என சொல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஜான் ஆரோக்கியசாமியை அருண்ராஜுக்கு Intro கொடுத்ததும் இவர் தான் என்ற பேச்சும் இருக்கிறது.
அவர் கட்சிக்கு வந்ததும் துணை பொதுச்செயலாளர் பதவியை கையில் கொடுக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் தவெகவில் இணைந்து முழு நேரம் தேர்தல் வேலைகளை பார்ப்பதற்காக தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாக சொல்கின்றனர்.
அவருக்கு இணை பொதுச்செயலாளர் பதவியை கொடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதால் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலக்கத்தில் இருப்பதாக பேச்சு இருக்கிறது. ஏற்கனவே ஆதர் அர்ஜூனாவை கட்சிக்குள் வரவிடாமல் உள்ளடி வேலைகளை புஸ்ஸி ஆனந்த் பார்த்ததாகவும், அதையும் மீறி ஆதவ் அர்ஜூனா கட்சிக்குள் நுழைந்து தனக்கு இணையான பொறுப்பில் வந்ததும் புஸ்ஸி ஆனந்துக்கு கடுப்பை கிளப்பியதாக பேசப்பட்டது. தற்போது அருண்ராஜின் entry ஆல் கட்சியில் நாம் ஓரங்கட்டப்பட்டு விடுவோமோ என்ற பயமும் புஸ்ஸி ஆனந்துக்கு இருப்பதாக சொல்கின்றனர். களப் பணியில் ஆக்டிவ்வாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார். இருந்தாலும் தலைமையில் தனக்கான இடத்துக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற குழப்பம் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.