’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

Continues below advertisement

மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற புஸ்ஸி ஆனந்த், தேவர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் வெல்க என கோஷமிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினரை விழா ஏற்பாட்டாளர்கள் உடனடியாக கீழே இறங்க சொன்னதால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

அக்டோபர் 30 ஆம் நாளான இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது ஸ்டைலில் பனையூரிலேயே தேவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தவெக சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அருண்ராஜ் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெகவினர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த நேரில் சென்றனர்.

அப்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் புஸ்ஸி ஆனந்த். இதனையடுத்து தவெக தொண்டர்கள் தவெக தவெக என சத்தமாக கோஷமிட்டனர். அதன் தொடர்ச்சியாக புஸ்ஸி ஆனந்த் தேவர் வாழ்க..தவெக வெல்க என முழக்கமிட்டார். இதனையடுத்து தவெகவினரும் அவரை தொடர்ந்து கோஷமிட்டனர். தேவர் நினைவிடத்திலும் தவெக வெல்க என கோசமிட்டதால் கடுப்பான விழா ஏற்பாட்டாளர்கள் போதும் இறங்குங்க என தவெகவினரை கூறியதால் பரபரப்பானது. 

வழக்கமாக பிற கட்சி நிகழ்ச்சிகளில் தவெக தவெக என கோஷமெழுப்பி தங்கள் பக்கம் கவனம் திருப்புவதை தவெக தொண்டர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஒருபடி மேலே போய், பிரபல யூடியூபர் ஸ்பீடிடம் டிவிகே டிவிகே என முழக்கமிட்டதும் விஜய்..விஜய்.. சி எம் ஆஃப் இந்தியா என கூறி சோசியல் மீடியாவில் பல்ப் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேவர் நினைவிடத்தில் தவெக வெல்க என முழக்கமிட்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola