Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற மாணவர்கள் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த காட்டமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுடன் , பெற்றோர் மற்றும் அல்லது உடன் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என அவர்களுக்கு கியூ ஆர் ஸ்கேனருடன் கூடிய அனுமதி அட்டை அளிக்கப்பட்டது.
அதேபோன்று 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசல் இல்லாமலும் பார்த்துக் கொண்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த மாவட்ட மற்றும் தொகுதிவாரியான நிர்வாகிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்பட்டு அவர்களுக்கு என இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
இந்தநிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகள் இடையே காட்டமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நிர்வாகிகள் வழி தெரியாமல் எங்கு போவது என விழித்துக் கொண்டிருந்த பொழுது, கிச்சனுக்கு அனுப்பிவிடு கிச்சனுக்கு அனுப்பிவிடு என புஸ்ஸி ஆனந்த் பேசியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு கட்சி நிர்வாகிகள் இடையே தலைமை நிர்வாகிகள் கடுகடு என நடந்து கொண்டது நிர்வாகிகள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இதேபோன்று நடந்த நிகழ்ச்சியின்போது புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களை துரத்தி துரத்தி அடித்தார் . அப்பொழுது விஜய் ஒரு நடிகராக மட்டுமே இருந்த நிலையில் அவை பெரிதாகவில்லை, ஆனால் இந்த முறை கட்சியின் தலைவராக இருக்கிறார். கட்சியின் நிர்வாகிகள் வந்த பொழுது கட்சியை நிர்வாகிகள் மத்தியில் இப்படி நடந்து கொள்வது சரியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் . பிற கட்சிகளில் நிர்வாகிகளுக்கு எப்படி மரியாதை தரப்படுகிறது. ஆனால் இங்கு இன்னும் நிர்வாகிகளை ரசிகர்களாகவே நடத்துவது முறையா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது