BRS Kavitha meet KCR : ஓடோடி வந்த கவிதா..கட்டி அணைத்த KCR..கண்ணீர் மழை!

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா ஜாமினில் வெளியே வந்த நிலையில், தந்தை கேசிஆரை பார்க்க ஓடோடி வந்துள்ளார்.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வந்த கவிதா தந்தை சந்திரசேகர் ராவை சந்திக்க அவரது பண்னை வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கவிதாவை உற்சாகமாய் வரவேற்ற பிஆரெஸ் கட்சியினர் அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர். 

இதையடுத்து தந்தையை பார்த்த கவிதா உனர்ச்சிவசப்பட்டு அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் தந்தை கேசிஆர் மகளை கட்டியணைத்து கொண்டார். இதையடுத்து கவிதா தனது அப்பாவின் கைக்கு முத்தம் கொடுத்து அன்பு செலுத்தினார். இருவரும் உச்சக்கட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மாறி மாறி அன்பு பரிமாறிக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola