Blue Sattai Maran : ’’யோவ் பிஸ்தா பருப்பு’’துணை முதல்வரை வம்பிழுத்த BLUE சட்டை மாறன்

Continues below advertisement

தமிழ் திரைப்படங்களை வித்தியாசமான முறையில் விமர்சித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் களம் குறித்தும், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள் என்றும், மும்மொழிக் கொள்கையில் இந்தியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதிகள் தமிழ் படங்களை மட்டும் இந்தியில் ரீமேக் செய்து வருவாய் பார்ப்பது ஏன்? இது என்ன லாஜிக் என்று பேசினார்.

அவரது கருத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது பாணியிலே கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், போடுறது சாமியார் கெட்டப்.

* பேசறது எல்லாம் சனாதனம், லட்டு, ஹிந்தி, சமஸ்கிருதம்.

*  பிற மதத்தினர் மற்றும் சனாதனத்தை‌ ஏற்காத இந்துக்கள் என் படத்தை பார்க்க வர வேண்டாம்னு சொல்ல மட்டும் வாய் வராது.

* பட வசூலுக்கு எல்லாரும் தேவை.

யோவ்.. பிஸ்தா பருப்பு.

என்று பதிவிட்டுள்ளார். 

ஆந்திராவின் துணை முதலமைச்சரான பவன்கல்யாண், தெலுங்கு திரையுலகின் உச்சபட்ச நடிகர் ஆவார். சிரஞ்சீவியின் தம்பியான இவரது ஜனசேனா கட்சி கடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். 

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக, சனாதான விவகாரத்தில் திமுக-வை மிகக்கடுமையாக விமர்சித்தார். 

இந்த நிலையில், மீண்டும் தமிழக அரசியல்வாதிகளை குறிப்பாக திமுக-வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வம்பிழுக்கும் விதமாக பவன் கல்யாண் பேசியுள்ளார். தற்போது, அவரது பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் அவருக்கு உரித்தான பாணியில் பதிலடி தந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram