BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்த போது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக பாஜகவினர் முன்வைத்த நிலையில், பி.எல்.சந்தோஷ் நிராகரித்ததாகவும் இதனை அறிந்த ஓபிஎஸ் அப்செட்டானதாகவும் தற்போது அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டுவருவதாகவும் சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு, பாஜக தனக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தமிழ் நாடு வந்த போது அவரௌ சந்திக்க நேரம் கேட்டும் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கடந்த காலங்களில் டெல்லி பாஜக தலைகள் அடிக்கடி ஓபிஎஸை நேரடியாகவே அழைத்து பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது அவரை திட்டமிட்டே பாஜக ஒதுக்கியுள்ளது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இச்சூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது இல்லத்திலேயே சந்தித்தித்து பேசினார் ஓபிஎஸ். இதனால் அவர் திமுக கூட்டணியில் இணைய உள்ளார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால்,அவரை சமாதனபடுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியை தொடங்கியது.
இதனிடையே சென்னை வந்த பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷிடம் தமிழக பாஜகவினர் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவது அவசியம் அதனால் ஓபிஎஸ்-ஐ நமது கூட்டணிக்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், பி.எல்.சந்தோஷ் அதனை நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த ஓபிஎஸ் கடும் அதிருப்திக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் தான் தற்போது அண்ணாமலையை வைத்து ஓபிஎஸை சமாதனப்படுத்தும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள் இனி அவர்களின் சகவாசமே வேண்டாம் என்று திமுக ஓபிஎஸ்-யிடம் கூறிவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே குழப்பிப்போய் இருக்கும் ஓபிஎஸ் மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு காத்திருப்பதா இல்லை திமுக பக்கமே ஒதுங்கி விடலாம என்ற யோசனையில் இருப்பதக சொல்கின்றனர் ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள்.