BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!

பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். எம்.எஸ்.ஷா சமீபகாலமாக பாஜக தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார் என்றும், இது தொடர்பான படங்களையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில், தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து என்ன நடந்தது என்பது குறித்து தனது மகளிடம் கேட்டுள்ளார். 


அப்போது அந்த சிறுமி, தன் அம்மா, சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் பாஜக பிரமுகரிடம் அழைத்து சென்று விட்டுள்ளார் என சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்த பாஜக நிர்வாகியும் அந்த சிறுமியை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துசென்று தனியாக இருந்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது போதாதென்று, வாட்ஸ் அப் வாயிலாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். தொடர்ந்து, வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கியும், பாலியல் வன்கொடுமை செய்து அதற்கு பதிலாக புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். 

பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா முதலில் தனது மனைவியிடம், தங்களது கடனை அடைத்து விடுவதாக கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததோடு மனைவி மூலமாக மகளையும் அழைத்துசென்று பாலியல் துன்பறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என அந்த புகார் மனுவில், மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4),  12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வந்தனர்.

இந்நிலையில், மதுரை உயர்நீதிநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் , தலைமறைவாக இருந்து வந்த எம்.எஸ்.ஷாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கல்லூரி நடத்தி வரும் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ் ஷா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola