BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோ

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மசூதி மீது அம்பு எய்வதுபோல் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் பிரமுகர் மாதவி லதா தற்போது வந்தே பாரத் ரயிலில் பஜனை செய்து அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மசூதி மீது அம்பு எய்வதுபோல் சைகை காட்டி பாஜக தலைவர் மாதவி லதா சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவின் போதும் புர்கா அணிந்து வந்த பெண்ணிடம் எந்த ஊர் ஆதார் கார்டு இருக்கா என கேட்டு பரபரப்பை கூட்டினார். இப்படி சர்ச்சைக்கு பெயர்போன மாதவி தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாஜக தலைவர் மாதவி தனது சகாக்களுடன் ஹைதராபாதில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்தார். அப்போது தனது சகாக்களுடன் இணைந்து மாதவி லதா ரயிலில் பஜனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola