BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFE
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பெண் பாஜக கவுன்சிலர் ஒருவர் மஹாராஸ்டிராவில் பாஜக வெற்றி பெற்றதைகொண்டாடும் நோக்கில் அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் அதே இனிப்பை வாங்கி துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் எனக்கூறி பாஜக கவுன்சிலருக்கே ஊட்டிவிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை 134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன். இவர் மஹாராஸ்டிராவில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சக கவுன்சிலர்கள் இனிப்பு வழங்கியுள்ளார். ஒரு பாக்ஸ் பாதுஷாவுடன் வந்து பாஜக வெற்றியை கொண்டாட தான் இனிப்பு வழங்குவதாக கூறி அனைவருக்கும் வழங்கினார். அப்போது அங்கிருந்த சிலர், துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளுக்காக வா என கேட்டனர். அதற்கு பதிலளித்த கவுன்சிலர், ’’நான் பாஜக வெற்றிக்காகத்தாக் இனிப்பு கொடுக்கிறேன் நீங்கள் அதை உதயநிதி பிறந்தநாளுக்கு என நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள்’’ என கூறினார்.
அப்போது திமுக கவுன்சிலர் ஒருவருக்கு இனிப்பு வழங்கிய போது, அதை பெற்றுக்கொண்ட அவர், அதே இனிப்பை பாதியாய் புட்டு இந்த பாதியை பாஜக வெற்றிக்காக நான் எடுத்துக்கொள்கிறேன்..அதேபோல் இந்த பாதியை துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளுக்காக நான் உங்களுக்கு கொடுக்கிறேன், நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என க்கூறி ஊட்டினார். அதை முழுமனதோடு வாங்கிக்கொள்வதாக கூறி பாஜக கவுன்சிலர் வாங்கிக்கொண்டு மீண்டும் தன்னிடம் இருந்த இனிப்பை அதிகாரிக்கு ஊட்டினார்.
மஹாராஸ்டிர பாஜக வெற்றிக்காக பாஜக கவுன்சிலர் கொண்டு வந்த இனிப்பை துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளுக்காக என கூறி திமுக கவுன்சிலர் ஊட்டிவிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.