BJP ADMK Alliance: 100 தொகுதி வேணும்.. ஆட்டம் காட்டும் அண்ணாமலை! குழப்பத்தில் இபிஎஸ் | EPS | TN

அதிமுக - பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சியா? இல்லை ஆட்சியில் பங்கா என்ற விவாதம் கிளம்பியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 100 வேண்டும் என்று அண்ணாமலை விடாப்பிடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் ஆளும் திமுக அதேகூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மறுபுறம் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கூட்டணி தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. மறுபுறம் அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக - அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். அப்போது, தமிழ் நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்தார். 

இதனை மறுத்த இபிஎஸ், ”அதிமுகவும்  பாஜகவும் இணைந்து கூட்டணியே தவிர கூட்டணி ஆட்சி அல்ல”என்று விளக்கம் அளித்தார்.  இச்சூழலில் 2026-ல் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறும் அதிமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பது பற்றி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சி மேலிடத்திற்கு ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் சட்டமன்ற தொகுதிகளை கேட்க கோரிக்கை வைத்துள்ளதாக சொல்கின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 20.5 சதவீத வாக்குகளை பெற்றது. அதேபோல், பாஜக கூட்டணி 18.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதேபோல், விளவங்கோடி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற வாக்கு சதவீத அடிப்படையில் 100 தொகுதிகளை இந்த முறை கேட்க வேண்டும் என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலை போல் குறைந்த தொகுதிகளை கொடுக்க அதிமுக முன் வந்தால் அதனை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் அண்ணாமலை டெல்லி பாஜகவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அதே நேரம் கூட்டணி ஆட்சியில் உடன்பாடு இல்லாமல் இருக்கும் இபிஎஸ், அதிமுக தலைமையில்தான் தமிழ் நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இருப்பதால் தாங்கள் ஒதுக்கும் தொகுதிதான் இறுதியானது என்று அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. கூட்டணிக்கும் இன்னும் சில கட்சிகள் வரலாம் என்றும் அதை கருத்தில் கொண்டே இபிஎஸ் மற்ற முடிவுகளை எடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola