Bahujan samaj on Vijay flag |விஜய்க்கு சிக்கல்? கொடியில் வெடிச்ச சர்ச்சை!டெல்லிக்கு பறக்கும் கடிதம்

Continues below advertisement

விஜய் TVK கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. BSP கட்சி சின்னமான யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. 

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும். தேர்தல் ஆணைய ஆறிவிப்புப்படி சிக்கிம், அசாம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையை கொடியில் பயன்படுத்த முடியாது. மேலும் யானையை எந்த வடிவிலும் கொடியிலோ சின்னமாகவோ பயன்படுத்த முடியாது என்று பகுஜன் ச்மாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது கட்சி கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணத்தில், வாகைப்பூ , இரட்டை யானைகள் 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.அதில் 23 நட்சத்திரங்கள் பச்சை நிறமாகவும் , ஐந்து நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் இடம் பெற்றுள்ளன. 

இந்த நிலையில், கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்த அதே நாளில் சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ( BSP) சின்னமாக யானை உள்ளது. தங்களின் கட்சி சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தங்களின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக புகார் மனுவும் வழக்கும் தொடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2026 தேர்தலை மனதில் வைத்து தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் விஜய்-க்கு, கொடி தொடர்பாக வெடித்துள்ள சர்ச்சை பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக நீக்குமா? அல்லது வழக்கை எதிர்கொண்டு யானை சின்னத்தை தக்க வைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram