KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோ
அமைச்சர் கே.என் நேருவுக்கு கட்சி தொண்டர் ஒருவர் செருப்பை எடுத்து கொடுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தான் திமுகவின் சமூக நீதியா என்ற கேள்வியை சிலர் முன்வைத்து வருகின்றனர்..
செருப்பை வைத்து எழுந்த சர்ச்சையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி மத்திய அமைச்சர் அமித்ஷா வரை இது வரை யாரும் தப்பாத நிலையில், அதில் லேட்டஸ்டாக மாட்டியிருப்பவர் தான் அமைச்சர் கே.என் நேரு. அவரது வீட்டிலிருந்து கே.என் நேரு வெளியே வருகையில், தொண்டர் ஒருவர் செருப்பை எடுத்து கொடுக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது..
ஏற்கனவே சேலத்தின் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.என் நேருவை நெருங்கவே முடிவதில்லை என சேலம் திமுக நிர்வாகி ஒருவர் மேடையில் பேசியது புகைச்சலை கிளப்பியது, அடுத்ததாக திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அமைச்சர் கே.என் நேரு பேசிய கருத்தும் சர்ச்சையானது. இந்நிலையில் அண்மையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜனை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் கே.என் நேரு..
இப்படி இருக்கும் சர்ச்சைகள் போதாது என்று, தற்போது மீண்டும் செருப்பை தொண்டர் ஒருவர் எடுத்துக்கொடுக்க, அதை அணிந்துக்கொண்டு கே.என் நேரு காரில் ஏறும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் செருப்பு எடுத்து கொடுக்க தனி ஆளா? இது தான் திமுகவின் சமூக நீதியா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.