Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோ
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் திகார் சிறைக்கு சென்றார்
இந்நிலையில் சிறைக்கு மீண்டும் செல்வதற்கு முன் தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார் கெஜ்ரிவால்
அதன் பின் தனது குழந்தைகளை கட்டிப்பிடித்து ஆரத் தழுவினார்.இதற்கு முன்பு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.என் மீதான குற்றங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் இந்த 21 நாட்களில் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கவில்லை. எனக்கு, தேர்தல் பரப்புரைக்காக 21 நாட்கள் வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.
கருத்துக் கணிப்புகள் குறித்து தெரிவிக்கையில், எல்லா கருத்துக் கணிப்புகளும் போலியானவை என்று என்னால் சொல்ல முடியும். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்று யாரோ அறிவுறுத்தியிருக்க வேண்டும் என கருத்து கணிப்புகள் குறித்து கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை, தேசம்தான் முக்கியம் அந்த பேட்டியின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.