Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

Continues below advertisement

டெல்லியில் நடைபயணத்தின்போது, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் திரவம் வீசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளும் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களும் அந்த நபரைப் பிடித்துத் தாக்கினர். தனக்கு என்ன நடந்தது என தெரியாமல் ஒரு நிமிடம் திக்குமுக்காடி நின்றார் கெஜ்ரிவால். வீசப்பட்டது தண்ணீர்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் ஆதரவாளர்களுடன் கெஜ்ரிவால் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. அந்த நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவலில் எடுக்கப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர், பாஜகவை சேர்ந்தவர் என டெல்லி முதலமைச்சர் அதிஷி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், "டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை" என்றார். குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோல்வியடைந்துள்ளது. இப்போது அவர் தனது பழைய தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். முன்பு ஒருமுறை அவரை அறைந்திருக்கின்றனர். அவர் மீது மை வீசப்பட்டது. இன்றும் அப்படித்தான் நடந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ன புதிய ஆட்டத்தை தொடங்கினார் என்பதை அவரே சொல்ல வேண்டும்" என்றார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram