Seeman Case : சவால்விட்ட சீமான்.. சீனுக்கு வந்த வருண்குமார் கலக்கத்தில் நாதக

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி  ஓருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்ட 22 பேர்  திருச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு  செய்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டும் விதத்தில் பேசியதாகவும் அதே போல க்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது .

  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் வருண் குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்து ஆபாசமாகவும் மிரட்டும் விதமாகவும் கருத்துக்களை பரப்பி உள்ளனர்.

இது குறித்து  திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகரளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே  சமூக வலைதளங்களில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை  சேர்ந்த கண்ணன் மற்றும்  திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அவர்கள் இருவரையும் வரும் 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிண் உறவினர்களும் போலீசார் அவர்களை 10 நிமிடத்தில் அனுப்பிவிடுவதாக கூறித்தான் கைது செய்தனர், அதன்பின் அவர்கள் இருவரும் எங்கே சென்றார்கள் என்ற் தெரியவில்லை நாங்களாக அவர்களை தேடி இங்கு வந்தோம் என்றும் போலீசார் அவர்களை அடித்ததில் பலத்த காயம் ஏற்ப்பட்டு இருப்பதாக கண்ணீரோடு தெரிவித்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola