AR Rahman Kamala Harris : OK சொன்ன ரஹ்மான்! கமலா ஹாரிஸ்-க்கு SUPPORT! 30 நிமிட பாடல் ரெடி

Continues below advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகின் அனைத்து நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தேர்தலாக மாறியிருப்பது அமெரிக்க அதிபர் தேர்தல். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் இருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதிலும் இந்தியர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களை கவரும் விதத்திலும் இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கமலா ஹாரிசுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இந்த சூழலில், கமலா ஹாரிசுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவருக்கு ஆதரவாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார். அவர் தன்னுடைய இசை மூலமாக கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பரப்பரையில் ஈடுபட உள்ளார்.

ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் என்ற அமைப்பு, கமலா ஹாரிஸுக்காக வாக்களாளர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. அந்தவகையில் கமலா ஹாரிஸுக்காக பிரச்சார பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 30 நிமிட பிரச்சார பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். நாளை இரவு 8 மணிக்கு இணையவழி மூலமாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி மூலமாக கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் ஈடுபட உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி இருந்து வரும் நேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவு ஜனநாயக கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram