DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்
விக்கிரவாண்டியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த திமுக எம் எல் ஏ அன்னியூர் சிவாவை பொதுமக்கள் ஆக்ரோஷமாக சுற்றி வளைத்து சரமாரியாக வாக்குவாதம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முத்தியால்பேட்டை, அயினம்பாளையம், கொய்யாதோப்பு, உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குடிநீர், உணவு கூட இல்லாமல் 4 நாட்களாக மக்கள் அவதிப்படுவதாகவும், அதிகாரிகள், திமுக அமைச்சர்கள் எம்.எல்.ஏ கள் யாரும் இதுவரை வரவில்லை என்ற ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் விழுப்புரம் - செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் எம் எல் ஏ ஸ்பாட்டுக்கு வந்தால் தான் எழுந்து செல்வோம் எனக்கூறி பிரச்சனை செய்தனர். இதனையடுத்து விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா சம்பவ இடத்திற்கு வந்தார்.
எம் எல் ஏ வை பார்த்தவுடன் மக்கள் அனைவரும் இடைத்தேர்தல் என்பது தெருவுக்கு தெரு ஆல் குவிச்சு வேலை பார்த்தீங்கல்ல இப்போ எங்க போனீங்க என கூச்சலிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். எம் எல் ஏ எவ்வளவோ தண்ணீர் வீடு உணவு ஆகியவை உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறி அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மக்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தில் இருந்து ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவை செருப்பால் அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ அன்னியூர் சிவாவிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.