Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அண்ணாமலை வீடியோ வெளியிட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில், கட்சி என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நயினார் நாகேந்திரனுக்கு மறைமுகமாக சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை தேசியத்தலைமை அறிவித்தது.இச்சூழலில் புதிய பாஜக மாநிலத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் அண்ணாமலையின் இடத்தை நிரப்புவார் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அண்ணாமலையை போல் அவர் வேகமாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை ஆதரவாளர்கள் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அண்ணாமலை நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளும் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த வீடியோவை பார்த்தா பாஜக தொண்டர்கள் மீண்டும் அண்ணாமலையையே தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மறுபுறம் நயினார் நாகேந்திரன் தலைவராக இருந்தாலும் அண்ணாமலை இன்னும் தன்னை தலைவராக நினைத்துக்கொண்டிருப்பதாக சொல்கின்றனர். கட்சி என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நயினார் நாகேந்திரனுக்கு மறைமுகமாக இந்த வீடியோ மூலம் அறிவித்திருப்பதாக சொல்கின்றன்ர் அரசியல் விமர்சகர்கள். அண்ணாமலை தலைவராக இருந்த போது தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் அவரது ஆதரவளர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பார்கள், ஆனால் இப்போது அண்ணாமலை மீடியா வெளிச்சம் வேண்டும் என்று இதுபோல் செயல்பட்டுவருதாக குமுறுகின்றனர் நயினார் ஆதரவாளர்கள்.