Annamalai | ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை ஆட்டத்தை தொடங்கிய நயினார் பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்
பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டதில் இருந்து அவர் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், பாஜக நிகழ்ச்சி ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலை புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை தேசியத்தலைமை அறிவித்தது. இச்சூழலில், நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியிலான பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது, போரட்டங்களில் கலந்து கொள்வது என்று செயல்பட்டு வருகிறார். ஆனால், அண்ணாமலை தலைவராக இருந்த போது பாஜக தொடர்ந்து அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்தது. நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தமிழக பாஜக மந்த நிலைக்கு சென்றவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆரம்பாத்தில் இருந்தே நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக பாஜக தலைமை அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில், பாஜக நிகழ்ச்சி ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலை புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, பாஜக கலந்தாய்வு கூட்டம் தொடர்பாக நந்தகுமார் என்பவர் அடித்துள்ள பேனரில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அண்ணாமலை புகைப்படம் இடம் பெறவில்லை. இதனால் கோபமடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் தலைவர் அண்ணாமலை புகைப்படம் இல்லாமல் யார வச்சு ஓட்டு கேட்க செல்வார்கள்? நேற்று வரை அண்ணாமலை ஆதரவாளர் என்று சொன்ன கும்பல் இன்று பதவிக்காக வாயை முடிக்கொண்டு அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தை புறக்கணித்தது, ஜேபி நட்டா சென்னை வந்த போது அவரை சந்திக்காதது என பாஜக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலைகளைக் கண்டித்து ஈரோட்டில் தனது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டங்களில் பங்கேற்காமல் தன்னிச்சையாக அண்ணாமலை போராட்டாத்ததில் குதித்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.