Annamalai vs EPS | அண்ணாமலையின் அதிக பிரசங்கி பேச்சு கண்டுகொள்ளாத இபிஎஸ்! பின்னணி என்ன?
அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசி வந்தாலும் இபிஎஸ் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் இபிஎஸ்-ன் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார். அதோடு கூட்டணி ஆட்சி தொடர்பாக அவர் பேசியதும் பேசிபொருளானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை வந்த போது கூட ”இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி 2026-ல் அமையும்’ என்று பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை, “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன்.
பாஜக ஆட்சி என்று தான் சொல்வோன்” என பேசினார். அதேபோல், 2026-பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்”என்று சொன்னார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடுமையன கண்டனம் எழும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், ”டெல்லிக்கு தலைமை மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி. சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக ஆட்சி மலரும். எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி. என்பதில்தெளிவாக இருக்கிறோம்.”என்றார்.
இந்த நிலையில் தான் அண்ணாமலை விவகாரத்தில் ஷாப்ட் டோனையே அதிமுக கடைபிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் சூழலில் களம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அதனால் அண்ணாமலையின் பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது நமக்குத்தான் பின்னடைவு அண்ணாமலையே இந்த கூட்டணியை உடைத்துவிட்டால் கூட நமக்கு பிரச்சனை இல்லை. நாம் சொல்வதை கேட்கும் ஒரு கூட்டணியை கூட தேர்தலுக்கு முன்னதக உருவாக்கிக்கொள்ள்லாம் என்று இபிஎஸ் நினைப்பதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.