Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMK
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பாஜக கூட்டணியை திமுகவை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக நான் பார்க்கவில்லை என்று கூறியது கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறியிருக்கிறார். அண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசியதன் பின்னனி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து லைம்லைட்டில் இருந்த அண்ணாமலை புதிய தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்து கப்சிப் ஆனார். அதாவது, கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தை புறக்கணித்தது, ஜேபி நட்டா சென்னை வந்த போது அவரை சந்திக்காதது என பாஜக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருந்ததாக கூறப்பட்டது. இச்சூழலில், தான் தனியாக கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலைகளைக் கண்டித்து ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணாமலை.
கட்சி தலைமை அறிவித்த போராட்டங்களில் பங்கேற்காமல் தன்னிச்சையாக அண்ணாமலை போராட்டாத்ததில் குதித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே தான், திமுகவை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணியைப் பார்க்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டார்.
இவரது இந்த பேச்சால் தலைமை மட்டுமின்றி தொண்டர்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தான் கட ந்த சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில்,”கூட்டணி குறித்தெல்லாம் கட்சி தலைவர்கள்தான் பதில் சொல்வார்கள். பாஜக கூட்டணி வலுவாகத்தான் உள்ளது” என்றார். இப்படி இவர் மாறி மாறி பேசி வருவது கமலாலய சீனியர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் தான் ண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசியதன் பின்னனி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதாவது மாநிலத்தலைபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் தனக்கு தேசியத் தலைமை மத்திய இணை அமைச்சர் பதவியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் அண்ணாமலை அப்செட்டில் உச்சத்துக்கே சென்றுவிட்டார். இதனால்தான் அவர் பாஜக சார்பில் நடக்கும் எந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளுக்கு பாஜக தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து கூறிய நிலையில் அண்ணாமலை இதனை புறக்கணித்தார்.
இதெல்லாம் தேசியத்தலைமைக்கு புகாராக சென்றது. இதையடுத்துதான் தற்போது அடக்கி வசிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் தான் நினைத்து எதும் நடக்கவில்லை என்ற விரக்தியில் தான் அண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்கின்றனர் கமலாலய சீனியர்கள்.