Annnamalai slams DMK | ”அன்றும்... இன்றும்முருகன் பார்க்குறாரு” விளாசும் அண்ணாமலை

Continues below advertisement

கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு இந்த வருடம் முருகன் மாநாடா முருகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்து சமய அறநலத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கடந்த ஆண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு  மாநாடு, இன்று முருகனுக்காக பழனியில் பிரம்மாண்ட நடத்தப்படுகிறது. இதில் பொதுவான விஷயம் என்னவேன்றால் இந்த இரண்டு மாநாட்டுக்கும் தலைமை தாங்குவது அமைச்சர் சேகர் பாபு தான். மக்களின் கோபத்தை திமுக  உணர்ந்தால் தங்களது நிலைப்பாட்டை எப்படி வேண்டும் என்றாலும்  மாற்றிக்கொளவர்கள். ஆனால் முருகப்பெருமான் இந்த நாடகத்தை பார்த்துத் கொண்டுத்தான் இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்” என்று விமர்சித்துள்ளார்.

கடந்து ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா போன்று சனாதனம் ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தது தேசிய அளவில் விவாதமாக மாறியது. இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்தநிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கும் நேரத்தில், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram