ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்
அண்ணாமலையின் உறவினர் வீட்டில் நடந்த ரெய்டை வைத்து ஆளுங்கட்சியினர் ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உறவினர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அவர் சம்பாதித்த பணத்தில் அண்ணாமலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று விமர்சிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ”அவர் எனது உறவினர் தான். எங்களின் சொந்தக்காரருக்கு அவரின் குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறோம். நானும் செந்தில் பாலாஜியும் கூடதான் உறவினர்கள். ன்னுடைய குடும்பமா, என் ரத்த சொந்தமா என்றால் இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கும். ஆனால், கொங்குப் பகுதியில் எனக்கு தூரத்து உறவினருக்கோ, சொந்தக்காரருக்கோ ரெய்டு நடந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்” என்று பதில் கொடுத்தார்.
அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில்தான் ரெய்டு நடந்ததாக எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். மேலும், சோதனையில், 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைபற்றி அண்ணாமலையிடம் கேட்டால் 'கரூரை சேர்ந்த ஜோதி-மணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம்' என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்கா கணவர் சிவகுமார் சொந்தம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஏற்கனவே திருச்சி சூர்யாவும் ரெய்டை வைத்துதான் அண்ணாமலை அதிமுகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வைத்து யார் அந்த சார் பதாகைகளுடன் மாலில் அதிமுக சார்பில் போராட்டம் நடந்தது. இதற்காக அதிமுக ஐடி விங்கை அண்ணாமலை பாராட்டியிருந்தார். இதனை விமர்சித்த திருச்சி சூர்யா எக்ஸ் பதிவில், ’ ஒரே ஒரு ரெய்டுதான் அண்ணாமலையின் மொத்த ஆட்டமும் க்ளோஸ் ! அண்ணாமலை உத்தமன் கிடையாது, எந்த தேர்தலிலும் ஜெயிக்காமலேயே பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார், கட்சியின் தேர்தல் நிதியை மச்சான் நிதியாக பயன்படுத்தியதால்தான் தோற்றுபோனார் என முதன்முதலாக நாம்தான் சொல்லி வந்தோம். தேர்தல் தோல்வியால் கடுப்பில் இருந்த டெல்லி, மச்சான் வீட்டுக்கு ஒரே ஒரு ரெய்டு அனுப்பி ₹800 கோடி வருமானத்தை கண்டுபிடித்தது. மாமனார் வீடு உள்பட இன்னும் சில ரெய்டுகள் தொடர இருந்த நிலையில் அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் உறவினர் வீட்டில் நடந்த ரெய்டை வைத்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருவது விவாதமாக மாறியுள்ளது