Anbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்

தனது மகன் அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சூழலில், அன்புமணி ராமதாஸ் இன்று பாமக நிர்வாகிகளை  சந்திக்க இருப்பதாக வெளியகியுள்ள  தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தனது மகள் வழிப்பேரனான முகுந்தனை  பாமக இளைஞரணி தலைவராக நியமித்தார் ராமதாஸ். அங்கு இருந்து தான் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது.

இதனிடையே கடந்த மே 10 ஆம் தேதி அன்புமணியின் தலைவர் பதவியை பறிப்பதாக அறிவித்த ராமதாஸ் இனி அன்புமணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்று அறிவித்தார். இச்சூழாலில் கடந்த மே 24 ஆம் தேதி தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் மறைந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கனல் இராமலிங்கத்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “கடந்த ஒரு மாதமாகவே எனக்கு பயங்கர மன உளைச்சல், தூக்கம் இல்லை. எனக்குள் பல கேள்விகளை தினம் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? ஏன் கட்சி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன்? என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

என்னுடைய நோக்கம், லட்சியம், கனவு எல்லாம் ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றுவது தான். வேறு என்ன எனக்கு கனவு இருக்கப்போகிறது?” என்று மன வேதனையுடன் பேசினார். இச்சூழல் தான் நேற்று தைலாபுரம் தேட்டத்தில் செய்தியாளார்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது தவறு. பாஜகவுடன் கூட்டணி அமைக்க என் காலில் விழுந்து அன்புமணியும், சொளமியாவும் அழுதனர். தனது தாயரையே அடிக்க முயன்றவர் அன்புமணி என்றெல்லாம் ராமதாஸ் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று நினைத்த அன்புமணி ராமதாஸ் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.  அந்த வகையில் இன்றில் இருந்து மூன்று நாட்கள் நிர்வாகிகளை சந்திது பேச அன்புமணி திட்டமிட்டிருக்கிறாராம். இந்த சந்திப்பில் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும், 38 வருவாய் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசானை மேற்கொள்ள இருக்கிறாரம் அன்புமணி. தொடர்ந்து ராமதாஸ் தன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் சூழலில் அன்புமணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola