Anbumani at Thiruchendur | அரிசி கொடுத்து துலாபாரம்! தவறி விழுந்த அன்புமணி
அரிசி கொடுத்து துலாபாரம்! தவறி விழுந்த அன்புமணி
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கும் போது அன்புமணி ராமதாஸ் தவறி விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் பதறினர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் கடற்கரை மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இப்படி வழிபட்டால் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைந்து அவர்கள் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று ஆடி அமாவாசையையொட்டி, கடற்கரைகளில் தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலை முதலே மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பாமக தலைவர் ராமதாஸும், அவரது மனைவி சௌமியா அன்புமணியும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எடைக்கு எடை துலாபாரமாக அரிசியை தானமாக வழங்கினர். அப்போது அன்புமணி ராமதாஸ் துலாபாரத்தில் அமரும் போது திடீரென தவறியதால் அருகில் இருந்தவர்கள் பதறினர். அன்புமணியை தொடர்ந்து சௌமியா அன்புமணியும் எடைக்கு எடை துலாபாரம் வழங்கினார்.
இதற்கு முன்பாக இருவரும் திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் மேற்கொண்டார்.