Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்

Continues below advertisement

அமாவாசை சென்டிமெண்டை கையில் எடுத்துள்ள அன்புமணி ராமதாஸ், பனையூரில் முக்கிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாமக பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்த நாளே அந்த பிரச்சனைக்கு பாமக முற்றுப்புள்ளி வைத்தது. வாக்குவாதம் ஏற்பட்ட மேடையில் அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூர் பகுதியில் தனி அலுவலகம் திறந்து இருப்பதாக அறிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் பனையூரில் ஏற்கனவே அலுவலகம் இருந்ததகாவும், அதனை முழு நேர அலுவலகமாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதாகவும் பாமகவினர் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்கள் அன்புமணியை சந்தித்து பேசியுள்ளனர்.

 

இந்த திடீர் ஆலோசனை தொடர்பாக பாமக வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அன்புமணியின் திட்டமாக உள்ளதாம். இதற்காக பாமக பலமாக உள்ள 50 தொகுதிகளில் மையப்படுத்தி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். 
இதற்கான யூகங்களை பாமக தலைவர் அன்புமணி வகுத்து வருவதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் பாமகவினர் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று, கும்பகோணத்தில் சாதிவாரி கணக்கெடுத்து நடத்த வேண்டும் என பாமக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்திருப்பதால், அதற்கான ஆயத்த பணிகளையும் அன்புமணி இறங்க உள்ளாராம். சமீபத்தில் குறுகிய நாட்களில் திருவண்ணாமலையில் நடந்த விவசாய மாநாடு பாமகவிற்கு, உத்வேகத்தை கொடுத்து இருக்கிறதாம்.
நேற்று அமாவாசை என்பதால் முதற்கட்ட ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறாராம். ஒவ்வொரு நிர்வாகியிடம் கட்சிக்கு வேலை செய்பவர்கள் பதவிக்கு வர வேண்டும், நானே நேரடியாக வருகிறேன் களத்தை தயார் படுத்துங்கள், 10.5 சதவீதம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் திமுகவிற்கு 2026 தேர்தலில் பாடம் கற்றுத் தர வேண்டும் என உத்வேகத்துடன் அன்புமணி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் அம்மாவாசை சென்டிமென்ட் வேலை செய்துள்ள நிலையில், அன்புமணியின் திட்டம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram