உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
அன்புமணி தனது அம்மாவை நேரில் சந்தித்து ராமதாஸ்-ஐ பற்றி புலம்பியதாகவும், பிரச்னையை சரிகட்டுவதற்காக அவரது அம்மா முக்கியமான அட்வைஸ் ஒன்றை சொல்லி அனுப்பியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ராமதாஸ் அன்புமணி இடையிலான மோதல் பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ், செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து அன்புமணி மீது புகார்களை அடுக்கி வருகிறார். அன்புமணியோ ஐயா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார். இருந்தாலும் என்னுடைய பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு ராமதாஸ் ஆர்டர் போட்டது மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்தநிலையில் ராமதாஸ் வீட்டில் இல்லாத போது கடந்த 10ம் தேதி தைலாவரம் சென்றிருந்த அன்புமணி தனது தாய் சரஸ்வதி அம்மாளைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ராமதாஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது என சொன்னதை சொல்லி புலம்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனக்கு எதிராக தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி வருவது அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கலாகி விடும் என தனது தரப்பு வேதனையை சொல்லியதாக தெரிகிறது.
அடுத்த சில நாட்களிலேயே சரஸ்வதி அம்மாள், பனையூரில் உள்ள தனது மகன் அன்புமணி வீட்டிற்கு வந்தார். சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அப்போது ராமதாஸ் பற்றி சௌமியா அன்புமணியும் சரஸ்வதி அம்மாளிடம் கண்கலங்கி பேசியதாக சொல்கின்றனர். நான் சொல்வதை கேட்காமல் சௌமியாவை மக்களவை தேதலில் போட்டியிட வைத்தார்கள், இந்த பிரச்னையின் சௌமியா அன்புமணியின் தலையீடும் இருப்பதாக கைகாட்டினார் ராமதாஸ். இதனையும் சரஸ்வதி அம்மாளிடம் சொல்லி, எனக்கு குடும்பத்தில் குழப்பத்தை கொண்டு வரும் எண்ணம் இருந்ததே இல்லை சௌமியா சொன்னதாக தெரிகிறது.
தந்தை மகன் மோதலால் உடைந்து போயுள்ள சரஸ்வதி அம்மாள் ராமதாஸிடம் பேசி சிக்கலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ந்த ஒரு தேர்தல் மட்டும் தந்தை ராமதாஸ் சொல்வதை கேட்டு நடக்கும்படியும் அன்புமணியை மீண்டும் தலைவராக மாற்றுவதற்கு ராமதாசிடம் பேசுவதாகவும் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இந்த சூழலில், ராமதாஸ்- அன்புமணி இணக்கமாகிவிட்டால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் நடக்கும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் ராமதாசுடன் இணைந்து அன்புமணியும் பங்கேற்பார் என்று பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.