Anbumani Angry | ’’ஐயாவுக்கு எதாவது ஆச்சு..தொலைச்சு போட்ருவேன்’’அன்புமணி ஆவேசம்

Continues below advertisement

ஐயாவுக்கு ஏதாவது ஆச்சு..தொலைச்சு போட்ருவேன்..செம கோவத்துல இருக்கேன் சும்மா டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா அவரு என்ன எக்‌ஷிபிஷனா என அன்புமணி ராமதாஸ் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை உத்தண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. 
இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் திடீரென கொந்தளித்து பேசினார். அப்போது பாமக நிறுவனரும் தனது தந்தையுமான மருத்துவர் ராமதாஸின் சமீபத்தில் உடல்நலக்குறைவு குறித்து பேசிய அவர், 
திட்டமிட்ட வழக்கமான செக்கப் தொடர்பாக அய்யா மருத்துவமனை சென்றார்.

அய்யாவுடைய செக்கப் சென்றதை சில பேர் தொடர்பு கொண்டு அய்யாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க என வலியுறுத்தியுள்ளார்கள், இதெல்லாம் என்ன அசிங்கமா இருக்கு, அய்யாவிற்கு 87 வயது காலில் ஆஞ்சியோ செய்துள்ளார்கள், யார் யாரோ வந்து பார்க்கிறார்கள் இது என்ன எக்சிபியூசனா? நான் இருக்கும் போது காரிடர் கூட வர மாட்டாங்க, தூங்க விட மாட்றாங்க, அய்யாவிற்கு ஏதாவது ஆனா தொலைச்சி போட்டுருவேன் சும்மா விட மாட்டேன், கோபத்தில் இருக்கேன் அய்யாவை வைத்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா என ஆவேசமாக பேசினார் அன்புமணி ராமதாஸ்.

முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். இதனையடுத்து சிகிச்சை முடிந்து ராமதாஸ் நலமுடன் டிஸ்டார்ஜ் ஆகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola