Anbil Mahesh | பிள்ளை ஏன் ஸ்கூலுக்கு வரல” பெற்றோருக்கு CALL பண்ண அன்பில்! அதிகாரிகளுக்கு ORDER
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிற்றலால் பள்ளிக்கு வராத மாணவரின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டது கவனம் பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு திடீர் விசிட் கொடுத்து வருகிறார். மாணவர்களுடன் கலந்தாலோசிப்பது, அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனிப்பது என பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். பின்பு பள்ளிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் இடைநிற்றல் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்து, பள்ளிக்கு வராமல் நின்று போன மாணவரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரணம் குறித்து கேட்டறிந்தார். இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றலால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் காரணம் குறித்து கேட்டு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அன்பில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் 1964 புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, தனியார் பள்ளிகள் அரசு விடுமுறைகளில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வாட்ஸப் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழையால் பாதிப்படைய கூடிய முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் தலைமை ஆசிரியர் ஆடையை தரைதளத்தில் இருந்து முதல் தளத்திற்கும் மாற்று வேண்டுமென தெரிவித்தார்.