Anbil Mahesh Hospitalized | கடும் வயிற்றுவலி..அட்மிட்டான அன்பில் மகேஷ்!ஓடி வந்த உதயநிதி

Continues below advertisement

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தி அறிந்த உடனே நண்பனை பார்க்க அமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பல்வேறு மாவட்டங்களில் உள்ல அரசு பள்ளிகளுக்கு திடீர் விசிட் கொடுத்து வருகிறார். நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று. அமைச்சஎ அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும்  நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கிய அவர். பின்பு பள்ளிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். 

மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் இடைநிற்றல் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்து, பள்ளிக்கு வராமல் நின்று போன மாணவரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரணம் குறித்து கேட்டறிந்தார். 

இதனையடுத்து மாலை சென்னை திரும்பிய அமைச்சருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அட்மிட்டான உயிர் நன்பனை பார்க்க அமைச்சர் உதயநிதி ஓடோடி வந்துவிட்டாராம்.
சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. 

திடீர் உடல்நலக்கிறைவு காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram