Amitshah vs Rahul: ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்
அம்பேத்கருக்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் 7 ஜென்மத்திலும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என சொன்ன அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் கோஷங்களை எழுப்பி அதிரவைத்துள்ளனர்.
அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது.
இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை சொல்லியிருந்தால் 7 பிறவியிலும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என சொன்னதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாசலிலேயே வைத்து அம்பேத்கர் புகைப்படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பிக்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்களவை தொடங்கியதும் அம்பேத்கர் புகைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஜெய்பீம் முழக்கங்களை எழுப்பினர்.
பாஜகவினரை பேச விடாமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.