Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

மனைவி, மகளை விரட்டி விட்டு மகளிர் தின விழாவா? என தவெக தலைவர் விஜயை இயக்குநர் அமீர் கடுமையாக சாடியுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை  இயக்குநர் அமீர் மறைமுகமாக சாடி தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார். இதற்கு தவெகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மகளிர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீது சமீப காலமாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதாக வெளியான வழக்கு மனு, அதில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டது என அடுத்தடுத்து விஜய் சர்ச்சையில் சிக்கினார். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் குடும்ப நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

விஜய்க்கு பலமே மகளிர் வாக்குகள் தான் என்ற போதிலும் அவர் ஏன் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துக் கொள்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய விமர்சனங்களுக்கு விஜய், சங்கீதா, த்ரிஷா தரப்பு என யாருமே பதிலளிக்கவில்லை. நிச்சயம் இதற்கு மகளிர் தின விழாவில் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில், மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். அவர் கட்சி மற்றும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இன்று நடக்கும் தவெகவைத்தான் அவர் விமர்சித்துள்ளார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola