Ambur Ambedkar Statue Fight: ’ஏய் நீ பேசாத..’’பாஜக vs திமுக மோதிக்கொண்ட பெண்கள் | BJP Vs DMK

ஆம்பூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற  பாஜக நிர்வாகியை திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவரால் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாதனூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயபாரதி பாரதிய ஜனதா கட்சியினருடன் மாலை அணிவிக்க வந்திருந்தார். அப்போது நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும், திமுக நிர்வாகியுமான பாரதி ஸ்ரீ என்பவர் பாரதிய ஜனதா கட்சியினரை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார், இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி மாதனூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயபாரதி மற்றும் பாஜகவினர் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் உடனடியாக இருதரப்பினரிடையே காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.  அதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் நரியம்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.. மேலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினரை, ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பெண் நிர்வாகி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola