Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்
விஜய்யை கூத்தாடி என சொன்ன ஆளூர் ஷாநவாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திருமாவளவனே அவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ஆதவ் அர்ஜூனா இருவருமே விசிக தலைவர் திருமாவளவனின் மனசாட்சி இங்கு தான் இருக்கும் என்பதையே சொல்லி திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கினர். இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு திருமாவுக்கு எவ்வளவு பிரஷர் இருக்கும் என்பதை உணர முடிகிறது என திமுகவை அட்டாக் செய்தார் விஜய்.
விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இருந்த விசிக mla ஆளூர் ஷாநவாஸ் இதை கேட்டதும் கடுப்பாகிவிட்டார். ” திருமாவளவன் குறித்து ஜெயலலிதாவோ, கலைஞரோ, ஸ்டாலினோ கூட இப்படி பேசியதில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியபோதுகூட, ‘தம்பி எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’ என்றே சொன்னார் ஜெயலலிதா. அதுவே எங்கள் தலைவர் பெற்ற சான்றிதழ்.அப்படியிருக்கையில், யார் இந்த கூத்தாடி விஜய்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. உண்மையில் விஜய் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
அவர் விஜய்யை கூத்தாடி என்று சொன்னதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் இருந்து வந்தவர் தானே என்று தவெகவினர் பதலடி கொடுத்தனர். இந்தநிலையில் விஜய்யை கூத்தாடி என சொன்னதற்கு திருமாவளவன் தன்னை கண்டித்ததாக ஆளூர் ஷாநவாஸ் சொல்லியுள்ளார். திருமாவளவனின் மதிப்பை குறைக்கும் வகையில் விஜய்யின் பேசியது விசிகவினர் யாராக இருந்தாலும் கோபத்தை தான் கொடுக்கும், அதில் தெரியாமல் விஜய் பற்றி வார்த்தையை விட்டுவிட்டேன் என ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார். திருமாவளவன் தன்னை அழைத்து இது உங்களுடைய இயல்பு இல்லையே, இப்படியெல்லாம் பேசக் கூடாது என சொல்லியுள்ளார். கட்சியினரே தவறு செய்தாலும் உடனடியாக கண்டிக்கும் திருமாவை பற்றி விஜய்க்கு எதுவுமே தெரியாமல் அழுத்தத்திற்கு பயந்து முடுவு எடுக்கிறார் என சொன்னது தவறு என்றும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.