Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

Continues below advertisement

புஷ்பா 2 சிறப்பு திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்து நலம் விசாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் ஹைதரபாத்தில் சந்தியா' தியேட்டரில் புஷ்பா-2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தாய் ஒருவர் பலியான நிலையில் அவரது  மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜூன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், மேலும் அவரை போலீசார் சிறையில் அடைத்து பின் ஜாமீனில் வெளிவந்தார். மேலும் தாயை இழந்த சிறுவனுக்கு படக்குழுவினர் சார்பில் 2 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனை அல்லு அர்ஜூன் சந்திக்காமல் இருந்தது விமர்சனத்தில் சிக்கியது.

இந்த நிலையில்  காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜை நடிகர் சந்திக்க அல்லு அர்ஜுன் செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அல்லு அர்ஜூனுடன் தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜுவுடன் சுமார் 30 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​அல்லு அர்ஜுன், ஸ்ரீ தேஜின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, குழந்தையின் தந்தையைச் சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் நடிகர் ஜனவரி 5 ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மருத்துவமனையில் பொதுமக்கள் இடையூறு விளைவிக்காத வகையிலும் ஊடகங்கள் கூடுவதைத் தடுக்க ரகசியமாக செல்வதை, ராம்கோபால்பேட்டை காவல் நிலையம் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியதை அடுத்து வருகை ஒத்திவைக்கப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram