என்னை மன்னிச்சிடுங்க ஆலியா மாடு செம CUTE பிரியங்கா வெளியிட்ட வீடியோ | Alia Bhatt Priyanka Gandhi
பாலிவுட் நடிகை ஆலியா பட் பெயரைக்கொண்ட பசுமாட்டை பிரியங்கா காந்தி, கொஞ்சி மகிழ்ந்துள்ளார். அதுகுறித்து சமூக வலைதளத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டிடம் மன்னிப்புக் கோருகிறேன் எனப் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது.
கேரளாவில் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடந்த 7ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடஞ்சேரிக்குச் சென்றுள்ளார். அங்கு உள்ள பால் பண்ணையில் ஆலியா பட் எனப் பெயரிடப்பட்டிருந்த பசுமாட்டை பார்த்துள்ளார். ஆலியா பட் மாட்டிற்கு தீவனம் ஊட்டி கொஞ்சி மகிழ்ந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில் மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன். திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும் ஆனால் உண்மையிலேயே அந்தப் பசு மாடு க்யூட்டி பை. என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட்-ஐ டேக் செய்து இதனை பதிவிட்ட பிரியங்கா தனது பயணத்தின் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் துரதிருஷ்டவசமாக, பால் பண்ணை விவசாயிகள் பல சிரமங்களுடன் போராடி வருகின்றனர். கால்நடை மருந்துகளின் விலை அதிகரிப்பு, போதுமான காப்பீட்டுத் தொகை இல்லாதது, நல்ல தரமான கால்நடை தீவனத்தை பெறுவதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளேன் என்று தெரிவித்தார்.