CV Shanmugam: கசிந்த கைது தகவல்? ... நள்ளிரவில் சமரசம் பேசிய சி.வி. சண்முகம்!

CV Shanmugam: விழுப்புரம் : நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்படலாம் என வெளியான உறுதிபடுத்தப்படாத தகவலால் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 28-02-2022 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தலைமயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார். அப்போது, கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைது செய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுக வினர் பயப்பட மாட்டோம்.இரவு 3 மணிக்கு வருவது, விடியற் காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம்." நீங்க எப்ப வேன்னாலும் வரலாம் என்று காட்டமாகவும் விரிவாகவும் பேசியிருந்தார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola