ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

Continues below advertisement

ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு அதிமுகவினர் செல்லும்போது எதிரே வந்த அமமுக கட்சியினர் ஒருவருக்கொருவர் வாழ்க கோஷம் போட்டதால் காந்தி மண்டபத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளான இன்று காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது எதிரே அஞ்சலி செலுத்துவதற்காக வந்த அமமுக கட்சியினர் ஒருவருக்கொருவர் வாழ்க கோஷம் போட்டதால் காந்தி மண்டபத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த கோஷத்தின் பொழுது அதிமுகவின் ஜெயக்குமார் அமமுகவின் சார்பாக டிடிவி தினகரன் அவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram