ADMK TVK Alliance | தூதுவிடும் எடப்பாடி! SURRENDER ஆன விஜய்? மாறும் கூட்டணி கணக்குகள்
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் உயரப் பறக்கும் தவெக கொடிகள்..கொடி பறக்குதா பிள்ளையார் சுழி போட்டாச்சு கூட்டணி வலுவாக அமையும் காலைரை தூக்கிவிடும் EPS..கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து முழுமையாக மாறிய அரசியல் காட்சிகள்..தமிழக அரசியலுக்கு என்னதான் ஆச்சு..இந்த வீடியோவில் பார்க்கலாம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் மின்னல் வேகத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி அதிமுக பாஜக கூட்டணி தவெக என இந்த தேர்தல் மும்முனை தேர்தலாக இருக்கும் என சில வாரங்களுக்கு முன்வரை தமிழக அரசியல் கள நிலவரம் சொல்லியது..ஆனால் ஒரே விக்கெட் ஒட்டுமொத்த அரசியல் காட்சிகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது.
திமுக அரசியல் எதிரி பாஜக கொள்கை எதிரி என அதிமுகவை சீண்டாமல் இருந்த விஜய்யிடம் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விகள் வலுக்க, மதுரை மாநாட்டில் முதன்முதலாக அதிமுக ஃபீல்டுலயே இல்லை என கெத்தாக சொல்லி பஞ்ச் பேசினார் விஜய். இதனையடுத்து அதிமுக சீனியர்ஸ் சிலரும் விஜ்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அதன் பின் அதிமுகவுடன் சென்றால் விஜய்க்கு முதல்வர் பதவி கிடைக்காது என்பதாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாலும் அதனை அவர் தவிர்த்து வருவதாக தவெக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.
இப்படி தனி ட்ராக்கில் சென்ற விஜய்தற்போது வெளியே தலைகாட்ட முடியாமல் சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் போட்டு காய்களை விறுவிறுவென நகர்த்தி வந்த தவெகவுக்கு பேரிடியாக அமைந்தது கரூர் சம்பவம்..தற்போது தஞ்சம் அடைய இடமில்லாமல் அதிமுகவிடமே சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் விஜய் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது..
எதிரெதிர் துருவங்களாக இருந்த அதிமுக தவெக கரூர் சம்பவம் அரங்கேறிய அந்த இரவு ஒன்றினைத்துவிட்டது என்கின்றனர். 41 உயிர்பலிகளை தொடர்ந்து விஜய் செய்வதறியாது சென்னை திரும்பினார். அன்றிரவே ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை அனைவரும் கரூருக்கு வந்து ஸ்கோர் செய்தனர். திமுகவோ இதுதான் சான்ஸ் என விஜயை காலி செய்ய ஈபிஎஸ்ஸோ பாவம் அவர் என்னதான் செய்வார் என விஜய்க்கு ஸாஃப்ட் கார்னர் காட்டினார்.
பதிலுக்கு இரண்டு நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்ட விஜய், பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு சப்போர்ட் செய்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி என கூறினார். இது ஒருபுறமிருக்க சரியாக சம்பவம் நடப்பதற்கு முன்பு நாமக்கல்லில் பேசிய விஜய் அதிமுகவை தாக்கி பேசினார். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரப் பயணங்களில் கூட்டத்தில் அதிமுக கொடியுடன் சேர்த்து தவெக கொடிகளும் உயரப் பறக்கிறது.
கூட்டணி நிலைப்பாட்டை தான் ஸாஃப்ட் லாஞ்ச் செய்கிறதா அதிமுக தவெக என அரசியல் விமர்சகர்களை யோசிக்க வைக்க, இரண்டு நாட்களுக்கு முன் அதே நாமக்கல் மண்ணில் பேசிய எடப்பாடி, கூட்டத்தில் பறந்த தவெக கொடியை காட்டி, கொடி பறக்குதா பிள்ளையார் சுழி போட்டாச்சு கூட்டணி வலுவாக அமையும் என முழங்கினார். எடப்பாடியின் இந்த பேச்சு ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
இதனையடுத்து விஜய் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திப்பாரா இல்லை தனக்கு முதல்வர் பதவி தான் முக்கியம் என தனித்தே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்விகள் வலுத்துள்ளது. எனினும் இதுகுறித்து தவெக வட்டாரத்தில் விசாரித்த போது கரூர் மேட்டரை சால்வ் செய்துவிட்டுதான் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தலைவர் யோசிப்பார்..கூட்டணி முடிவுகள் டிசம்பருக்கு பிறகு தான் என ஒரே போடாக போட்டுவிட்டனர்.
எனினும் எடப்பாடியின் இந்த தூதை அக்செப்ட் செய்வாரா விஜய் என்பதை பொறுத்திருந்து காணலாம்.





















