ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

Continues below advertisement

சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்துவிட்டு தற்போது இரட்டை வேடம் போடுவது அம்பலமாகி உள்ளது என ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்த சட்டம் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஆனால் அந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  அதே நேரத்தில் மாநில சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவளித்தது அம்பலமாகியுள்ளது. சுரங்கங்களை பாஜக தன்னிச்சையாக ஏலம் விடும் சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தம்பிதுரை பேசியுள்ளது அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

இதுக்குறித்து ஸ்டாலின் பாஜக அரசு 28.07.2023 தேதி சுரங்கம் மற்றும் கனிம திருத்த சட்ட மசோதா நிறைவேறிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை #Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

திரு. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram