EPS ADMK Election plan : SILENT MODE-ல் அதிமுக! மௌனம் காக்கும் EPS... காரணம் என்ன?
தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத அளவிற்கு சைலன்ட் மோடுக்கு சென்றுள்ளது அதிமுக.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் பலம் தெரிய வரும், கொங்கு மண்டலத்தில் திமுகவை தோற்கடிப்போம் என்று அதிமுக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்க.. பிரச்சாரத்தில் எல்இடி திரைகளில் திமுகவின் வீடியோக்களை போட்டு காட்டி அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு நாங்கள்தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி என்று அலறவிட்டார் ..
ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த நாளிலிருந்து, அட சும்மா தேர்தலுக்காக பேசினோம்பா என்பது போன்று அதிமுகவின் தலைவர்கள் அனைவருமே Airplane மோடுக்கு சென்று விட்டனர்.
குறிப்பாக திமுக அனைத்திடங்களிலும் வெல்வோம் என்று சொல்லி வருகிறது இன்னொரு பக்கம் பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வாக்கு சதவீதம் பெறுவோம், இரண்டு மூன்று தொகுதிகளை கைப்பற்றுவோம் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, வெற்றி பெறுவோம், திமுகவை வீழ்த்துவோம், எத்தனை இடங்களை கைப்பற்றுவோம் என எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்கிறார்.
குறிப்பாக தேர்தல் முடிந்த சில நாட்கள் கண்டன அறிக்கைகள் ஆவது வெளிவந்தது, ஆனால் தேர்தல் ரிசல்ட் தேதி நெருங்க நெருங்க அமைதியோ அமைதி என மேலும் அமைதியாகிவிட்டது அதிமுக. இதன் மூலம் அங்கே இருக்கும் தலைவர்களுக்கு தங்கள் கட்சி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.
அதே நேரம் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு என்ற நிலை உருவாகலாம். அவர்களுமே அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து ஜெயலலிதாவை ஹிந்துத்துவா தலைவர் என்று சொல்லி மேலும் அதிமுக பாஜக இடையேயான தொலைவை அதிகப்படுத்திக் கொண்டே தான் வருகிறார்கள்.
ஒரு பக்கம் நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்வது என அண்ணாமலை ஆக்டிவாக இருக்க, இன்னொரு பக்கம் ஐஎன்டிஐஏ கூட்டணியின் ஆலோசனைகளில் பங்கேற்பது, பாஜகவை எதிர்ப்பது என ஸ்டாலினும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் தற்போது முக்கியத்துவமே பெறாமல் ஒரு கட்சி வலம் வருகிறதா என்றால் அது அதிமுக வாகத்தான் இருக்கிறது. மேலும் தேர்தலுக்குப் பின் பல்வேறு அதிரடிகள் காத்துள்ளன, முடிவுகளைப் பொறுத்து பல்வேறு கணக்குகள் மாறலாம் என்று அதிமுக ஜாகையில் இருந்து வெளிவரும் தகவல் இது புயலுக்கு முன்பான அமைதியா என்னும் கேள்வியும் எழுப்பியுள்ளது.