Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!
ஜெயலலிதா அம்மா கூட இதை எங்களுக்கு செய்யலங்க... நீங்க செஞ்சு கொடுத்து இருக்கீங்க...என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அதிமுக அமமுக நிர்வாகிகள் கையெடுத்து கும்பிட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
மதுரை கரிமேடு பகுதியில் மார்க்கெட் அருகே புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத் திறப்பு விழாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்திருந்தார். அமைச்சர் பிடிஆரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 35 லட்சம் மதிப்பீட்டில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அப்பகுதியை சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உணர்ச்சி பொங்க பேசி நன்றி தெரிவித்தனர்.
அப்போது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக்கூடம் அமைத்து தந்தமைக்கு அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ’’அம்மா இருக்கும்போது கூட இதை செய்யலங்க... நீங்க செஞ்சு கொடுத்து இருக்கீங்க…’’ என
உணர்ச்சி பொங்க பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.