ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்ஷனில் இறங்கிய TTV | EPS | DMK
அதிமுகவுடன் டிடிவியின் கூட்டணி ப்ளான் ... பாஜக கொடுத்த அசைமெண்ட்(voice over)
திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற , தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை எப்படியாவது இணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு டெல்லி பாஜக அசைமெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை திமுக, அதிமுக, பாஜக , தவெக , நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகளும் திட்டம் தீட்டி வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே தான் போட்டி போட்டது. இரண்டு கட்சிகளுமே படுதோல்வி அடைந்தது. இது திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து போட்டி போட்ட அமமுக மற்றும் பாமகவும் தோல்வியையே தழுவின. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே போட்டி போட்டால் அது திமுகவின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் அக்கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் டெல்லி சென்ற டிடிவி தினகரன் 2026 கூட்டணி குறித்து டெல்லியில் முக்கிய பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினாராம். முன்னதாக டிடிவி தினகரன் ”பாஜக அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடும்” என்று கூறினார்.
இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய டிடிவி மீண்டும் அதே கருத்தையே அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். எப்படியாவது மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்று டெல்லி பாஜக டிடிவி தினகரனுக்கு அசைமெண்ட் கொடுத்துள்ளதால் தான் அவர் இந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக , அமமுக இணைந்து சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.